Thursday, July 15, 2010

நெஞ்சு பொருக்கு திலேயே

அது ஒரு மாலை நேரம், மழை வேறு அடைத்துக்கொண்டு வந்தது. அவசரமாக வேலை முடித்து கிளம்பி விட்டேன். எப்படியாவது மழை வருவதற்கு முன்பாக வீடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று கிளம்பினேன். இன்று வழக்கத்தை விட கொஞ்சம் டிராபிக் அதிகமாக இருந்தது. ஒரு வழியாக டிராபிக் ய சமாளித்து வண்டி ஒட்டி கொண்டு இருந்தேன்.

திடீர் என்று கண்ணில் பட்டது ஒரு பெட்ரோல் பங்க், ஆஹா இன்று வண்டிக்கு எப்படியாவது பெட்ரோல் போட்டு விட வேண்டும் என்று நேற்று இரவே யோசித்து வைத்து இருந்தேன், காலையில் ஆபீஸ் அடைய வேண்டிய அவசரத்தில் பெட்ரோல் போடாமல் விட்டு விட்டேன். இப்பயும் போடலேன்னா அப்பறம் நாளைக்கு சாயந்தரம் தான் என்று முடிவு செய்து பெட்ரோல் பங்க் பக்கம் வண்டியை ஓரம் கட்டினேன்.

அட கடவுளே நமக்கு எப்ப அவசரமோ அப்பதான் எதிர்மாறா நடககும், எனக்கு முன்னாடி 10 - 15 வண்டி நின்று கொண்டு இருந்தது . சரி என்று நானும் வரிசையில் போய் நின்றேன். இடி, மின்னல் வேறு விட்டு விட்டு வந்து கொண்டு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வரிசை முன்னேறியது. திடீர் என்று வரிசையில் நின்று கொண்டு இருந்த எல்லோரையும் கடந்து ஒரு வண்டி முன்னாடி சென்று புகுந்தது.

எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. என்னை கடந்து முன்னேறியவன் ஒரு கல்லூரி மாணவன் போல் இருந்தான்.  உண்மையாக அவனுக்கு அப்படி ஒரு அவசரம் என்றால் எங்களிடம் ஒரு மரியாதை நிமித்தம் அனுமதி கேட்டு இருக்கலாம். ஆனால் இது எதுவும் செய்யாமல் அனைவரையும் முன்னேறி சென்றது மிகவும் எரிச்சலாக இருந்தது. இருந்தும் நான் அவனை தடுக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. நான் எனக்கு பின்னால் நின்றவர்களையும் முன்னால் நின்றவர்களையும் மாறி மாறி பார்த்து விட்டு முன்னேறினேன்.

இது ஒரு மிக சாதாரண விஷயம், ஆனால் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.  என் உச்சி மண்டையில் சுத்தியல் கொண்டு அடித்த மாதிரி ஒரு உணர்வு. நான் ஏன் அவனை தடுக்க முற்படவில்லை. நான் ஏன் அதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தேன். எனக்கு ஏதாவது பிரச்னை வந்து விடும் என்ற பயமா அல்லது மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு ஏன் என்ற கேவலமான மனப்பாங்கா?

நிச்சயமாக இதை பார்த்து கொண்டு இருந்தவர்களில் யாராவது இது போல் நிச்சயமாக நாளை முயற்சி செய்வார்கள். யாராவது அவனை தடுக்க முயற்சி செய்து இருந்தால் அங்கு இருந்த மற்றவர்கள் இனி இது போல் முயற்சி செய்ய வாய்புகள் குறைந்து இருக்கும்.

இது போல் என் கண் முன்னால் நிறைய சுய ஒழுக்க மீறல்கள், நான் கண்டு கொள்ளாமல் தான் சென்று கொண்டு இருக்கின்றேன். பாரதி பாடிய
"நெஞ்சு பொருக்கு திலேயே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் 
அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை இந்த அவனி இலே"
வரிகள் எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

3 comments:

  1. எனக்கேன் வம்பு... அவனோட எவன் பேசுவான்... இந்த என்னப்போக்குதான் இதற்கு காரணம், நிச்சயம் இதுபோன்ற நேரங்களில் குரல் கொடுக்க வேண்டும். இனியேனும் மணி முயற்சியுங்கள். நிச்சயம் எல்லா நேரங்களிலும் நாம் நம் கருத்தை நிலைநிருத்திட முடியாது எனினும் சில தடைகளேனும் இருந்தால் தான் இது போன்ற சம்பவங்கள் செய்ய தயங்குவார்கள்.

    ReplyDelete
  2. குரு நீங்க சொல்லுறது சரிதான், பிரச்சனை வேண்டாம் என்று கண் முன்னால் நடந்தேறும் தவறிற்கு துணை போய் இருக்கேன்றேன். நிச்சயம் அடுத்த முறை பூனைக்கு மணி கட்ட நான் முயற்சிக்கறேன்.

    ReplyDelete