Wednesday, July 21, 2010

களவாணி- விமர்சனம்

சென்ற வார இறுதியில் களவாணி திரைபடம் பார்த்தேன். இங்கே என்னோடைய விமர்சனம்.


அரிக்கி என்கிற அறிவழகன் தான் கதாநாயகன், இவரை சுற்றி தான் கதை நகர்கிறது, இவரை தான் களவாணி என்று அழைக்கிறார்கள். அரிக்கி, ஊரை சுற்றி திரியும் பொறுப்பு இல்லாத இளைஞன். இவரை சுற்றி ஒரு நண்பர் கூட்டம். அரிக்கியின் அப்பா துபாய்இல் வேலை பார்க்கிறார், அவர் அனுப்பும் பணத்தை அம்மாவிடம் இருந்து ஏமாற்றி அதை ஊதாரி தனமாக செலவு செய்கிறார். அரிக்கியின் அம்மாவும், தங்கையும் படம் முழுக்க நம் ஹீரோவால் ஏமாற்றபடுகிறார்கள். அரிக்கியின் ஊருக்கும் அவருடைய பக்கத்துக்கு ஊருக்கும் நீண்ட ஆண்டுகளாக பிரச்சனை.


அரிக்கியின் பக்கத்துக்கு ஊரை சேர்ந்தவர் தான் கதாநாயகி மகேஷ் என்கிற மகேஸ்வரி. மகேஷ்இ அரிக்கி காதலிக்க ஆரம்பிக்கிறார். மகேஷ் +1 படிக்கும் மாணவி, இவர் பள்ளிக்கூடம் போக அரிக்கியின் ஊரை தாண்டிதான் போகிறார். அப்படி போகும் வழியில் தான் இவர்கள் இடையே காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் அரிக்கி விளையாட்டாக என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு என்று கேட்டு பின்பு உண்மையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.


அரிக்கியின் அப்பா, பையன் கம்ப்யூட்டர் படிக்கிறான் என்று நம்ப வைக்கப்படுகிறார் அரிக்கியின் அம்மாவால். வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் உடைக்கப்பட்ட நிலையில்( ரேடியோ, போன், பேன், செம்பு என்று அனைத்தும்). இந்நிலையில் தான் அரிக்கியின் அப்பாவுடன் துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் வீட்டுக்கு வருகிறார். வீட்டு நிலவரம் அவரிடம் தெரிவிக்கபடுகிறது அரிக்கியின் தங்கைஎன் மூலமாக.


ஒரு முறை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மதுஅருந்தும் போது( ஊரை ஏமாற்றி பணம் பறித்துதான்) நண்பன் ஒருவன் காதல் சொல்லி அழ உடனடியாக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பெண்ணை கடத்தி கல்யாணம் செய்ய கிளம்புகிறார்கள்.  அந்த பெண் மகேஷின் உறவுக்கார பெண். மகேஷின் அண்ணன் இளங்கோவுக்கு(இவர்தான் வில்லன்) முறை பெண். ஒரு வழியாக பெண்ணை கடத்தி வரும் வழியில் சாமர்த்தியமாக தப்பித்து கடைசியில் பெண்ணே காரிலேயே விட்டுவிட்டு துரத்தி வரும் இளங்கோ மற்றும் ஊர்காரர்களிடம் இருந்து தப்பி, துபாயில் இருந்து திரும்பி வரும் அப்பா காரில் தஞ்சம்புகுந்து அப்பாவிடம் கையும் களவுமாக மாட்டி கொள்கிறார்.


இதற்கு பிறகாவது அப்பா கண்டிப்பார், அரிக்கி திருந்துவார் என்று எதிர்பார்த்தால், அதுதான் இல்லை.  இடைவேளைக்கு பிறகு அரிக்கிஎய் காதல் வாட்டுகிறது.  மகேஷ்க்கும்  இன்னொருவருக்கும்  அவசர அவசரமாக  திருமணம் வரை போய் களவாணிதனம் பண்ணி காதல் ஜோடி ஒன்று சேர்கிறது.  சண்டை போட்டு கொண்டிருந்த ஊரும் குடும்பமும் அரிக்கியின் தயவால் அவருடைய குழந்தைஇன் காதணி விழாவில் ஒன்று சேர்கிறது. இடைவேளை வரை அரிக்கி என்று அழைக்கபடுபவர் இடைவேளைக்கு பிறகு களவாணி, களவாணி என்று அழைத்து படத்தின் தலைப்பை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்.


மொத்தத்தில் களவாணி படம் என் பார்வையில், கொஞ்சம் எதார்த்தம் நிறைய விடுபடிகிற லாஜிக். மகன் என்ன பண்ணுகிறான் என்று அப்பா ஏமாற்றபடுவது. அம்மா படம் முழுவதும் ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்தால் பையன் டாப்ல வருவான் என்று கண்மூடிதனமாக இருப்பது. காதலியின் வீட்டு பாடத்த தங்கைஎ ஏமாற்றி எழுத வைப்பது என்று நிறைய மைனஸ். பஞ்சயத்தாக வரும் கஞ்சா கருப்புவின் நகைசுவை படத்திற்கு பிளஸ். அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்கள். விடுபடுகிற அனைத்து லாஜிக்சயையும் தள்ளி விட்டு பார்த்தால்  தொய்வு இல்லாமல் முழுவதுமாக 90 விழுக்காடு ரசிக்கலாம் களவாணிய.

2 comments:

  1. விமர்சனம் ஓகே.ஆனா லேட்.படம் வந்து 25 நாள் ஆச்சே.

    ReplyDelete
  2. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. அடுத்த முறை என்னுடைய விமர்சனத்தை கொஞ்சம் முன்னதாக பதிப்பிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete